Wednesday, May 30, 2012
Monday, May 21, 2012
முள்ளு சீதா (Graviola ) புற்றுநோய்க்கு எளிய வைத்தியம் !!!!
![]() |
| முள்ளு சீதா (Graviola ) |
பெயர் : முள்ளு சீதா
தாவரவியல் பெயர் : Annona muricata
மற்ற பெயர்கள் : Graviola
Soursop,
Brazilian Paw Paw,
Guanabana.
![]() |
| பழத்தின் நீள் வெட்டுத் தோற்றம் |
இருப்பினும் நவீன மருத்துவ முறையில் “கிமோ தெரப்பி” என்னும் சிகிச்சைக்கு பின் உடனடி பக்க விளைவுகள் மற்றும் செலவு இவைகளை கணக்கிட்டால் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள “முள்ளு சீதா” நன்று என்றே தோன்றுகிறது.
![]() |
| நன்கு வளர்ந்துள்ள முள்ளு சீதா |
![]() |
| வீட்டில் நன்கு வளர ஆரம்பித்துள்ள முள்ளுசீதா |
தற்போதைய உணவு பழக்கம் அளவிற்கு மீறிய இரசாயன மருந்து மற்றும் உரங்கள் இவை புற்று நோய்க்கு வழிவகுக்கின்றது. இதனை குறைப்பதற்கு மாற்று மருத்துவத்தில் வழி உண்டு என்பதை பரம்பரை ஞானமும் விஞ்ஞானமும் சொல்கிறது. எடுத்துக் கொள்வதும், விட்டுவிடுவதும் அவரவர் கையில் உள்ளது.
![]() |
| பதப்படுத்திய ஃக்ரேவையோலா ‘டீ’ |
Labels:
இயற்கை வைத்தியம்,
மரம்
Saturday, May 19, 2012
பப்பாளி - வீட்டுத் தோட்டதிற்கு ஏற்ற பழ மரம்.
பெயர் : பப்பாளி
தாவரவியல் பெயர்
: CARICA PAPAYA
வெப்பமண்டல நாடுகளில்
எளிதாக வளர்க்கப்படும் பழமரம். நல்ல மகசூல் தரும் 2 அல்லது 3 ஆண்டு பயிர். ஆனால்
தற்சமயம் மாவுப் பூச்சி(Mealy Bug ) தாக்குதலால்
இதன் விவசாயப் பரப்பு வெகுவாக குறைந்து விட்டது. வைரஸ் நோய் தாக்குதலும் உண்டு. பூர்வீகம்
மெக்ஸிகோ என்றாலும் எல்லா வெப்பமண்டல நாடுகளிலும் வீட்டுத் தோட்டத்தில் விரும்பி
வளர்க்கப்படுகிறது. வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் போது பழத்திற்கான வகைளை
வளர்ப்பது நல்லது.
![]() |
| பழத்தில் மாவுப் பூச்சியின் தாக்குதல் |
![]() |
| இலைகளிலும் மாவுப் பூச்சியின் தாக்குதல் |
வணிக ரீதியாக வளர்க்கும் போது கவனம் தேவை காரணம் பழத்திற்கான வகைகளும், "பப்பையின்" எனப்படும் பப்பாளி பால் தரும் வகைகளும் உண்டு. பூசா (Pusa) விவசாய கல்லூரியின் ரகங்கள், வேளாண்மை கல்லூரி, கோவையின் ‘கோ’ ரகங்கள், பெங்களூரு ரகங்கள் பெண்ட்நகர் ரகங்கள் பிரபலம். தற்சமயம் தைவான்நாட்டு ரகமான ‘ரெட்லேடி’ (Redlady (F-1 Hybrid) நகர்புற மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. 10 கிராம் விதையின் விலை ரூ.1600/=க்கு மேல். பப்பாளி பால் எடுக்க கோ.2 கோ.5 மற்றும் கோ.6 ரகங்கள் ஏற்றவை.
![]() |
| ஒரு அடிக்கு மேல் நீளமுள்ள பழம் |
நன்கு வளர்க்க நீர் தேங்காத நல்ல வடிகால்
வசதியுள்ள மண் வேண்டும். மேலும் பப்பாளியில்
ஆண்மரம், பெண்மரம் மற்றும் இருபால் மரங்கள் உண்டு.
இதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் துணை புரியும் பப்பாளி உடலில் நோய்
எதிர்ப்பு சக்தியை மிகுதியாக்குகிறது.
மலச்சிக்கல் நீக்கும். பப்பாளி
காயை சமைத்து உண்டு வந்தால் உடல் எடை குறையும். பழசாற்றை நன்கு முகத்தில்
பூசி சில நிமிடங்கள் கழித்து கழுவ முகப் பொலிவு கிடைக்கும். பப்பாளி பால் மருந்து, அழகுசாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மாமிசம் பதப்படுத்துவதிலும் பயன்படுகிறது. பப்பாளிகாய் டூட்டி ஃபுரூட்டி தயாரிப்பில் அதிகம் பயன்படுகிறது. பழம் ஜாம்
தயாரிக்க பயன்படுகிறது.
Labels:
மரம்,
வீட்டுத்தோட்டம்
Subscribe to:
Posts (Atom)













